சர்வதேச பெண்கள் தினம் ஒரு பார்வை..... 8.03.2013.
http://www.bing.com/images/search?q=frauentag+bilder+des+tage&qpvt=frauentag+bilder+des+tage&FORM=IGRE#
சர்வதேச பெண்கள் தினம் ஒரு பார்வை..... 8.03.2013.
ரஷ்ய நாட்டில் இத்தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அதிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திஆரத்தழுவி கொள்வதில் பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆண்கள் மலர்கள் பரிசளிப்பதைவிட பொருளாக வழங்குவதை அதிகம் விரும்புகின்றனர்.அதைவிடஇவர்கள் பாரிஸ் இல் பிரசித்தி பெற்ற வாசனை திரவியங்களோ இல்லை பெறுமதியான பொருட்களை பரிசாக அளிப்பதை விரும்புவதில்லை. அதனால் பிரச்சனைகள் ஏற்படும் என்பது இவர்களது நம்பிக்கை. அதைவிட விருந்தினர்களை அழைத்து அழைத்து கூடி மகிழ்வது அதிக மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிலும் ஒற்றைப்பட மலர்களை பரிசாக அளிப்பது அதிஷ்டம் எனவும், இரட்டை எண்ணில் கல்லறைகளிற்கே வைப்பது இவர்களது வழக்கமாகும்.
யேர்மனியில் 98% குடிமக்கள் பெண்கள்தினத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சம அடிப்படையில் வருமானம் ஆண் பெண் பாலரிற்கு வழங்கப்படுதல் வேண்டும் என்பதாகும்.அதிலும் கல்விமான்களாக பட்டம் பெற்றும் வருமானம் குறைவாகவே பெறுகின்றனர் எனவும், அடுத்து பெண்களாய் வறுமைப்பட்டவர்கள் உயர்வும் கவனத்தில் எடுக்கப்படுதல் வேண்டும் என்பது வைக்கப்பட்ட கோரிக்கையாகும்.
முன்னாள் கிழக்கு யேர்மனியில் கடந்த 60 ஆண்டுகளிற்கு முன்பு பெண்கள் கல்வித்தராதரம் முடிக்கப்படாதவர்கள் எனவும், இவர்களது குடும்பத்தில் ஆண்கள்
போரில் இறந்த காரணம் ஒருபுறம் இருக்க பாலர் கல்விநிலயங்களில் சிறுவர்களிற்கு அனுமதி கிடைக்காத பட்சத்திலும் தொடர்ந்து கல்வித்தராதரம் இன்றியே குடும்பப் பெண்களாக வாழ்ந்துள்ளனர்.
அதிலும் குடும்பத்தில் இளையோர்களாய் பெண்கள் உதவிபுரிந்து வந்துள்ள நிலையில்
சர்வகாலசாலை உயர்கல்வியோ, இல்லை கல்வித்தராதரத்தையே
முடிக்கப்படாமலே இருந்துள்ளனர். இதில் 43.0% பட்டப்படிப்பை முடிக்கப்படாது பணிபுரியப்படாதவர்களும். 16.0% சர்வகாலசாலை பட்டப்படிப்பை முடிக்காதவர்களும், 24.8% உயர்கல்வி முடிக்கப்படாத பெண்கள் கடந்து 1950 ம் ஆண்டுக்காலப்பகுதியில் இருந்த கணிப்பீடாகும். கடந்த 1963ம் ஆண்டில் 30% மே படித்த பெண்களாகவும் பணிபுரியப்பட்டுள்ளனர் எனவும் இதில் தெரிவிக்கப்படுகின்றது.
யேர்மன் மொழி பிரதியாக்கம் தமிழில்
சுஜாதா.
No comments:
Post a Comment