Friday, March 7, 2014

அடி பெண்ணே!!!!



சாமர்த்தியமாய் வாழ்க்கையில் பாதியை நகர்த்தும் வல்லமை
சமாதான வெண்புறாவிற்கு தூதுவிடும் வல்லமை
சளைக்காத மனபக்குவம் சளைத்திடாத வல்லமை...
சலிப்பிற்குள்ளும் வலியை விரட்டியடிக்கும் வல்லமை
சுகத்திலும் சுகமான வல்லமை.

சாக்கும் போக்கும் விரட்டியடிக்கும் வல்லமை
சாதாரணமாய் ரணங்களை விரட்டிடும் வல்லமை
சகுனத்திற்கு முத்திரை குற்றிய மானிடத்தை விரட்டிடும் வல்லமை
சரிநிகரானது வாழ்க்கையில் பாதி என்பதற்கானது
வல்லமை
உன் வாழ்க்கையின் வெற்றிப்படி.அடி பெண்ணே!!!!!!!!!!

ஆக்கம்.
by.sujatha.

Tuesday, January 21, 2014

ஊர்கூட்டி அழைத்து பெருமைப்படுவதல்ல புகழ். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




தம்பட்டம் அடித்து புகழைத்தேடுவது நமக்கே தலைகுனிவான செயல். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



வேண்டாத விஷயங்கள் அலசி ஆராயும் போது நாமே சங்கடப்படுகின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கலகலப்பாக பேசும் போது முகமலர்ச்சி தானாகவே மலர்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha



வெறுமை தானாகவே சோம்பலை வரவழைக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha



அரும்பாடு பட்டு உழைக்கும் போது உற்சாகம் தானாகவே கைகொடுக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

சிந்தனைத்துளிகள்.!!!!!!!!!!!!



கலகலப்பாக பேசும் போது முகமலர்ச்சி தானாகவே மலர்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



வெறுமை தானாகவே சோம்பலை வரவழைக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




அங்கலாய்ப்பு பேராசையை வெளிக்காட்டமுடியாத ஒருவித அவலம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

Wednesday, September 4, 2013

சிந்திக்க தூண்டுபவை.!!!!



வேண்டாவெறுப்பு மனதில் இருக்கும் கஷ்டத்தை வெளிப்படுத்தாத
உணர்வு. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


ஆடம்பரத்தில் குதூகலித்தாலும் எதிர்நோக்கும் கஷ்டங்கள்
விலகப்போவதில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
வலுக்கட்டாயம் மனதில் மேலும் சுமைகளை ஏற்றிவிடுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



வலோக்காரமாக காரியத்தை சாதிப்பது விமர்சனத்தை வளர்த்தெடுப்பது போலாகும். கற்றுக்கொள்வோம்.
by. sujatha.

சிந்தனைத்துளிகள்!!!!!!!!


குறைகளோடு காலத்தை குறையாக கடத்துவதை போல் வேறொன்றுமில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


குறைகளை காண்பதல்ல பெரிது விரிவுபடுத்துவது அதைவிட மேல். கற்ற்க்கொள்வோம்.
by.sujatha.

Saturday, March 9, 2013

தகுதிதராதரம் நமக்குள் அறிவை வளர்க்கலாம் அதற்காக அடுத்தவரை அவமதிப்பதல்ல வாழ்க்கை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



சளைக்காது உழைப்பவனிற்கு நேரம் பொன்னானது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



குதர்க்கமாக பேசிவிட்டு சங்கடப்படுவதைப்போல் வேறொன்றுமில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha
 
உருட்டும்புரட்டும் வார்த்தைகளை கூட புரளவைக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



பரந்துபட்ட மனதில் வாய்மை தானாகே பேசிக்கொள்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



 மனம் கனப்பாக இருப்பதாக நாமாக மனதிற்குள் அலட்டி குறைப்படுகின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கனவிற்குள் ஆசைகளை வளர்த்து நம்மையை ஏமாற்றிக்கொண்டிருப்பதல்ல வாழ்க்கை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



 மழுப்பி ஒரு அலுவலை முடிப்பது பலதொல்லைகளை வளர்த்துவிடுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha



மரியாதைக்குரியவர்களிடம் பயபக்தி தானாகவே ஏற்படுகின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

சிந்திக்கத்தூண்டுபவை!!!!!


பாடுபட்டு உழைக்கும்போது மனம் பூரிப்பு அடைகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


 பெரிய நினைப்புக்கள் இருக்கலாம் இதுவே நினைப்பாக மாறிவிடலாகாது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


 பட்டகஷ்டங்கள் சிலசமயங்களில் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

Wednesday, March 6, 2013

சர்வதேச பெண்கள் தினம் ஒரு பார்வை.....  8.03.2013.

http://www.bing.com/images/search?q=frauentag+bilder+des+tage&qpvt=frauentag+bilder+des+tage&FORM=IGRE#

சர்வதேச பெண்கள் தினம் ஒரு பார்வை.....  8.03.2013.


ரஷ்ய நாட்டில் இத்தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அதிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திஆரத்தழுவி கொள்வதில் பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆண்கள் மலர்கள் பரிசளிப்பதைவிட பொருளாக  வழங்குவதை அதிகம் விரும்புகின்றனர்.அதைவிடஇவர்கள் பாரிஸ் இல் பிரசித்தி பெற்ற வாசனை திரவியங்களோ இல்லை பெறுமதியான பொருட்களை பரிசாக அளிப்பதை விரும்புவதில்லை. அதனால் பிரச்சனைகள் ஏற்படும் என்பது இவர்களது நம்பிக்கை. அதைவிட விருந்தினர்களை அழைத்து அழைத்து கூடி மகிழ்வது அதிக மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


                                             அதிலும் ஒற்றைப்பட மலர்களை பரிசாக அளிப்பது அதிஷ்டம் எனவும், இரட்டை எண்ணில் கல்லறைகளிற்கே வைப்பது இவர்களது வழக்கமாகும்.

                                                                 யேர்மனியில் 98% குடிமக்கள் பெண்கள்தினத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சம அடிப்படையில் வருமானம் ஆண் பெண் பாலரிற்கு வழங்கப்படுதல் வேண்டும் என்பதாகும்.அதிலும் கல்விமான்களாக பட்டம் பெற்றும் வருமானம் குறைவாகவே பெறுகின்றனர் எனவும், அடுத்து பெண்களாய் வறுமைப்பட்டவர்கள் உயர்வும் கவனத்தில் எடுக்கப்படுதல் வேண்டும் என்பது வைக்கப்பட்ட கோரிக்கையாகும்.

 முன்னாள் கிழக்கு யேர்மனியில் கடந்த 60 ஆண்டுகளிற்கு முன்பு பெண்கள் கல்வித்தராதரம் முடிக்கப்படாதவர்கள் எனவும், இவர்களது குடும்பத்தில் ஆண்கள்
போரில் இறந்த காரணம் ஒருபுறம் இருக்க பாலர் கல்விநிலயங்களில் சிறுவர்களிற்கு அனுமதி கிடைக்காத பட்சத்திலும் தொடர்ந்து கல்வித்தராதரம் இன்றியே குடும்பப் பெண்களாக வாழ்ந்துள்ளனர்.
                                                        அதிலும் குடும்பத்தில் இளையோர்களாய் பெண்கள் உதவிபுரிந்து வந்துள்ள நிலையில்
சர்வகாலசாலை உயர்கல்வியோ, இல்லை கல்வித்தராதரத்தையே
முடிக்கப்படாமலே இருந்துள்ளனர். இதில் 43.0%  பட்டப்படிப்பை முடிக்கப்படாது பணிபுரியப்படாதவர்களும். 16.0% சர்வகாலசாலை பட்டப்படிப்பை முடிக்காதவர்களும், 24.8% உயர்கல்வி முடிக்கப்படாத பெண்கள் கடந்து 1950 ம் ஆண்டுக்காலப்பகுதியில் இருந்த கணிப்பீடாகும்.  கடந்த 1963ம் ஆண்டில் 30% மே படித்த பெண்களாகவும் பணிபுரியப்பட்டுள்ளனர் எனவும் இதில் தெரிவிக்கப்படுகின்றது.

 

யேர்மன் மொழி பிரதியாக்கம் தமிழில்

சுஜாதா.


Wednesday, February 27, 2013


  தகவலை பெற்றுக்கொள்ளுங்கள்.


உலகில் அதிகூடிய வயதை எட்டிய யப்பானிய பெண்மணி.





படத்தில் இருக்கும் யப்பானிய பெண்மணிக்கு 114 வயது. கடந்த
5.03.1898 ம் அண்டு ஒக்காவில் பிறந்தவரின் அத்தாட்சி பிறப்புப்பத்திரம் காட்டுகின்றது.வயோதிப இல்லத்தில் வசித்துவருபவர் வரும் நாளில் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். உலகில் அதிகூடிய வயதை எட்டியவராக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். அத்துடன் யப்பானில் 51000 வயோதிபர்களிற்கு மேற்பட்டவர்கள் 100 வயதை எட்டியுள்ளனர். அத்துடன் யப்பானிலேயே அதிகூடிய வயதையுடைய ஆண் Jiroemon Kimura என அழைக்கபடுபவரிற்கும் 115 வயதாகும். தகவல் கூறுகின்றது.
 யேர்மன் மொழி தமிழில் பிரதியாக்கம்.
சுஜாதா.
 
 ஒரு மனிதனின் உடல் ஆரோக்யம் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கின்றது. ஆசைகளை வெறுக்கும் மனிதன் நீண்ட ஆயுளையும் பெறுகின்றான். முன்னோர்கள் உணவுக்கட்டுப்பாட்டை
இயற்கைவளங்களில் இருந்து பெற்றே ஆரோக்யத்தையும் வளர்த்துக்கொண்டார்கள்.மனிதன் நலத்தை பேணுவதற்கு தன்னை
தயார்படுத்துவதில் கவனத்தை செலுத்துபவனாக இருந்தால் ஆரோக்ய வாழ்வு நம்மை தன்வழி கூட்டிச்செல்கின்றது.
                                                                   உடல் ஆரோக்யம் மனக்கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.
அதாவது ஒன்றை வழிநடத்துவது நமக்குள் இருந்து வெளிப்படுதல்
வேண்டும். அடுத்தவரை எதிர்பார்ப்பதில் நமக்குள் இருப்பவை வெளிப்படமாட்டாது.
                                                 இங்கு உணவு பழக்கவழக்கங்கள் முன்னோர்கள் கற்றுக்கொடுத்தவை. ஆனால் இன்று யாவுமே தலைகீழாகிவிட்டன. நாகரீகம் ஒன்று வளர்ந்ததில் உண்ணும் உணவுகள் யாவும் இயந்திரமுறைகளாகிவிட்டன. இதில் ஆரோக்யம் நீண்டதொரு ஆயுளையும் கொடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளன.
       
        

Tuesday, February 12, 2013

கவிதை.

                                 காதல்!!!!!! காதல்!!!! காதல்!!!!

http://www.bing.com/search?q=valentins%20blumen%20bilder&PQ=valentins%20b&SP=1&QS=HS&SK=&sc=7-23&form=WLETSH&pc=WLEM




திறவுகோல்கள் தளர்ந்த மனக்கதவு
திறக்காது தட்டிச்சென்ற இதயக்கதவு
திருடிச்சென்ற வாசல்கதவு தட்டியகதவு
காதல்!!! காதல்!!!!

புனிதமான பாசத்தின் நேசக்கரம் நீட்டியகதவு
புரிந்துணர்வு பகிர்ந்த பாசக்கதவு
புரிவை புரிந்ததில் திறந்தகதவு
புதிதாய் பிறந்த குழந்தை உணர்வு
காதல்!!!! காதல்!!!!


பரவசம் வீசும் தென்றல் காற்றின் சுகமும்
பரந்த பூமி நமக்காக பிறந்த சுகமும்
பரவசமான மூச்சுக்காற்றின் சுகமும்
பரந்து சுகமான பாசத்தின் சுகமும்
பரந்த காதல் !!! காதல்!!!!


புலரும் காலைப்பொழுதின் சுகமும்
மலரும் மலர்களின் வாசத்தின் சுகமும்
மலர்ந்து மலர்கின்ற புன்சிரிப்பின் சுகமும்
மனதை கொள்ளையடித்து கொடுக்கும் சுகமும்
வருடி அழைக்கின்றது சுகமான சுகமாக
காதல்!!! காதல்!!!

 ஆக்கம்  
 சுஜாதா.