Wednesday, February 27, 2013


  தகவலை பெற்றுக்கொள்ளுங்கள்.


உலகில் அதிகூடிய வயதை எட்டிய யப்பானிய பெண்மணி.





படத்தில் இருக்கும் யப்பானிய பெண்மணிக்கு 114 வயது. கடந்த
5.03.1898 ம் அண்டு ஒக்காவில் பிறந்தவரின் அத்தாட்சி பிறப்புப்பத்திரம் காட்டுகின்றது.வயோதிப இல்லத்தில் வசித்துவருபவர் வரும் நாளில் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். உலகில் அதிகூடிய வயதை எட்டியவராக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். அத்துடன் யப்பானில் 51000 வயோதிபர்களிற்கு மேற்பட்டவர்கள் 100 வயதை எட்டியுள்ளனர். அத்துடன் யப்பானிலேயே அதிகூடிய வயதையுடைய ஆண் Jiroemon Kimura என அழைக்கபடுபவரிற்கும் 115 வயதாகும். தகவல் கூறுகின்றது.
 யேர்மன் மொழி தமிழில் பிரதியாக்கம்.
சுஜாதா.
 
 ஒரு மனிதனின் உடல் ஆரோக்யம் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கின்றது. ஆசைகளை வெறுக்கும் மனிதன் நீண்ட ஆயுளையும் பெறுகின்றான். முன்னோர்கள் உணவுக்கட்டுப்பாட்டை
இயற்கைவளங்களில் இருந்து பெற்றே ஆரோக்யத்தையும் வளர்த்துக்கொண்டார்கள்.மனிதன் நலத்தை பேணுவதற்கு தன்னை
தயார்படுத்துவதில் கவனத்தை செலுத்துபவனாக இருந்தால் ஆரோக்ய வாழ்வு நம்மை தன்வழி கூட்டிச்செல்கின்றது.
                                                                   உடல் ஆரோக்யம் மனக்கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.
அதாவது ஒன்றை வழிநடத்துவது நமக்குள் இருந்து வெளிப்படுதல்
வேண்டும். அடுத்தவரை எதிர்பார்ப்பதில் நமக்குள் இருப்பவை வெளிப்படமாட்டாது.
                                                 இங்கு உணவு பழக்கவழக்கங்கள் முன்னோர்கள் கற்றுக்கொடுத்தவை. ஆனால் இன்று யாவுமே தலைகீழாகிவிட்டன. நாகரீகம் ஒன்று வளர்ந்ததில் உண்ணும் உணவுகள் யாவும் இயந்திரமுறைகளாகிவிட்டன. இதில் ஆரோக்யம் நீண்டதொரு ஆயுளையும் கொடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளன.
       
        

No comments:

Post a Comment