கவிதை.
தலைக்கனம்!!!!!! தலைக்கனம்!!!!!!
தகுதி தராதரம் பகுத்தறியாத கனம்
தகுதிக்கு தகுதி தரம்பிரிக்காத கனம்
பகுதி பகுதியாக பிரிக்காத கனம்
தகுதி தரத்திலும் தகாத கனம்.
மனதில் வகுத்திடும் தகுதியல்ல
மனதால் மதிப்பிடும் தகுதியும் அல்ல
கனமாய் கனக்கும் கனமும் அல்ல
கனத்தின் தரமும் பெறுமதியும் அல்ல.
மதிப்போரை மதிக்காத மனோபலம்
மனதில் கனக்க கணக்கிடும்பலம்
மனதால் மதிக்காத அவமதிக்கும் பலம்
தலைக்கனமான பலமல்ல.
ஆக்கம்.
சுஜாதா.