கவிதை.
எண்ணங்கள்!!!!!! எண்ணங்கள்!!!!
எண்ணத்தில் எண்ணங்கள் வளர்த்திடலாகுமோ
எண்ணத்தில் எண்ணம் பெருகிடலாகுமோ
எண்ணத்தில் எண்ணமாய் எண்ணிடலாகுமோ
எண்ணத்தில் எண்ணம் உயர்ந்திடலாகுமோ.
எண்ணத்தில் ஏற்றம் பெருமையுமல்ல
எண்ணமாய் ஏற்றம் பெரிதுமல்ல
எண்ணத்தில் ஏற்றம் ஏற்றமும் அல்ல
எண்ணத்தில் ஏற்றம் ஆனித்தரமானதும் அல்ல.
எண்ணக்கருவில் எழுந்திடும்போது அழகழகானவை
கண்ணில் மின்னி கலைந்திடும் போது கனவானவை
விண்ணில் உயரஉயரப்பறந்தாலும் எட்டமுடியதவை
எண்ணத்தில் எண்ணமாக இவை நினைக்கமுடியாதவை.
பெருமையிலும் பெருமை எண்ணத்தினாலாகாது
பெரிதான எண்ணத்தில் பெயர் பெற்றிடலாகாது
பெருமாற்றம் எண்ணத்தில் பேரெண்ணமாகிடலாகாது
பெருமிதமான எண்ணம் கொண்டிராத எண்ணம்
பெருமையிலும் பெருமை அன்றோ.
ஆக்கம்.
சுஜாதா.
No comments:
Post a Comment