Tuesday, January 8, 2013

 கவிதை!!!!

 பெருமை.....பெருமை....



பெருமிதம் கொள்ளாத பெருமை
பெருமிதத்திலும் பெருமை.
பெருமதிமாய் மார்தட்டி மனதினில்  கொண்டதோர் கர்வம்
அவமதிப்பிலும் அவமதிப்பு.

அகத்தில் இல்லாத அழகை தொலைத்து
முகத்தில் உதிக்காத புன்னகையிலும்
சுகத்திலும்  சுகம் கொண்டிராத
பெருமையின் பெருமை கண்டிடலாகுமோ.

மதிப்போர் மதித்திட மகிழ்ச்சியில் பொங்கிட
மனதிலே மலரும் மலர்களைப்போல்
மகிழ்ச்சியை கொடுக்கும் பெருமையின் பெருமிதம்
பெருமையிலும் பெருமை.


தகுதி தராதரம் இதில் காண்பதில் பெருமையல்ல
தகுதிக்கு தகுதி பார்த்திடுவதும் பெருமையல்ல
தலைக்கனம் கனத்திடலாம் மதிப்பவர் மதித்திடாத
பெருமையின் பெருமை அவமதிப்பாகும்.

ஆக்கம்.
சுஜாதா.

No comments:

Post a Comment