Sunday, February 10, 2013

தகவலை பெற்றுக்கொள்ளுங்கள்.

 

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய விமானநிலயம் சீனா
பெய்ஜிங்கில் கட்டியெழுப்பப்படவுள்ளது.





உலகிலேயே இரண்டாவது பெரிய விமானநிலயத்தை சீனாவின்
தலைநகரம் பீக்கிங் இங்கு அமைப்பதற்குரிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதை அடுத்து 20 கிராமப்புறங்களில் உள்ள
நிலப்பகுதிகள் அபகரிக்கப்படவுள்ளது.50கி.மீ பீக்கிங்கிலிருந்து விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் சோளம், மரக்கறிகள் பயிரிடப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

                                                         வரும் ஐந்து வருடங்களிற்குள் கட்டியெழுபப்படவுள்ளன. இதற்குரிய பெரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எவரும் எதிர்ப்புக்கள்
தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது
                                          வருடத்தில் 70மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஏறி இறங்கும் அளவிற்கு ஏழு ஒடுபாதைகள்  கட்டியெழுப்பப்படவுள்ளன. Nangezhuang  பகுதியில் இருபது கிராமங்கள் உள்ளதாகவும், இவைகளை அப்புறப்படுத்துவதற்கு தயாரகவுள்ளதாக இதற்கு பொறுப்பான    60 வயதுடைய Li Wenhui.  தெரிவித்துள்ளார். வரும் ஆனி மாதம்
ஆரம்பிக்கப்படவுள்ளநிலையில் அரசாங்கத்தின் முடிவையும் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரவிக்கப்படுகின்றது.
                 கடந்த 2008ம் ஆண்டு இப்பகுதியில் புதிய குடிமனைகள்  கட்டியெழுப்புவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தன 
எனவும், அரசாங்கம் இதுவரை அறியத்தரவில்லை எனவும்,  இதனால் வீட்டை கட்டியெழுப்பவோ இல்லை இடத்தை விட்டுவிலகவோ தெரியாது இங்கு வாழ்கின்றோம் என குடிமகன் ஒருவர் முறைப்பட்டுள்ளார்.

                           எட்டு பில்லியாடன் செலவீட்டில் வரும் 2018ம்    ஆண்டு      கட்டியெழுபப்படவுள்ளதாகவும்    இதில் கூறப்படுகின்றது. 

யேர்மன் மொழி தமிழில் பிரதியாக்கம்.
சுஜாதா.


No comments:

Post a Comment