கவிதை.
காதல்!!!!!! காதல்!!!! காதல்!!!!
http://www.bing.com/search?q=valentins%20blumen%20bilder&PQ=valentins%20b&SP=1&QS=HS&SK=&sc=7-23&form=WLETSH&pc=WLEM
திறவுகோல்கள் தளர்ந்த மனக்கதவு
திறக்காது தட்டிச்சென்ற இதயக்கதவு
திருடிச்சென்ற வாசல்கதவு தட்டியகதவு
காதல்!!! காதல்!!!!
புனிதமான பாசத்தின் நேசக்கரம் நீட்டியகதவு
புரிந்துணர்வு பகிர்ந்த பாசக்கதவு
புரிவை புரிந்ததில் திறந்தகதவு
புதிதாய் பிறந்த குழந்தை உணர்வு
காதல்!!!! காதல்!!!!
பரவசம் வீசும் தென்றல் காற்றின் சுகமும்
பரந்த பூமி நமக்காக பிறந்த சுகமும்
பரவசமான மூச்சுக்காற்றின் சுகமும்
பரந்து சுகமான பாசத்தின் சுகமும்
பரந்த காதல் !!! காதல்!!!!
புலரும் காலைப்பொழுதின் சுகமும்
மலரும் மலர்களின் வாசத்தின் சுகமும்
மலர்ந்து மலர்கின்ற புன்சிரிப்பின் சுகமும்
மனதை கொள்ளையடித்து கொடுக்கும் சுகமும்
வருடி அழைக்கின்றது சுகமான சுகமாக
காதல்!!! காதல்!!!
ஆக்கம்
சுஜாதா.
No comments:
Post a Comment