Saturday, December 29, 2012

வாழவேண்டும் என்று நினைக்கும் போது மனதில் சிலமாற்றங்கள்
நம்மை அறியாமலே ஏற்படுகின்றது.அதாவது வாழ்க்கையில்
ஏற்படும் மனக்கஷ்டங்களால் இந்நிலை ஏற்பட்டாலும் மாற்றங்கள்
நமக்கு வழிகாட்டியாகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
பணம் மிஞ்சிவிட்டால் வாழ்க்கை என்ன என்பதையே மறந்துவிடுகின்றோம். அதாவது அளவிற்கு மீறிய செலவு எம்மை அறியாமலே பணமோகத்தில் மூழ்கடிக்கின்றது. பணம் கண்ணை
மறைத்துவிட்டது என்று இதற்குத்தான் கூறுவார்கள். கற்றுகொள்வோம்
by.sujatha.


வாழ்க்கையை சமாளிப்பது வேறுவிடயம்.ஆனால் சமாளிக்கும் பக்குவமும் இருந்தால் ஒழிய நகர்த்துவது கடினம். இங்கு எப்படி
நகர்த்தலாம் என்ற பக்குவத்தை கற்றுக்கொள்வோமாயின் வாழ்க்கை வழிகாட்டி. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



வாழ்க்கையை சீரழிப்பது நமது கையில் இருக்கின்றது.அதாவது
வழிகாட்டிகள் கைகொடுக்கும் போது கற்றுக்கொடுத்து கற்றுக்கொடுப்பவை. அடுத்தவர்களால் ஏற்படும் என்பது தப்புக்கணக்கு. நாம் வழிகாட்டிகளாக கற்றுக்கொடுப்போம்.
by.sujatha.
 
தவறுகள் என்று உணரும்போது மனம் கலக்கமடைகின்றது இல்லையா. அதாவது திருத்தமாக ஒன்றை செய்யமுற்படவில்லையே என்ற உணர்வு பின்னால் தட்டிக்கொடுக்கும் போது அந்த உணர்வு நம்மை திருத்தவைக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


தந்திரமாக ஒரு அலுவலை பார்ப்பது நமக்குள் ஒருவித திறமை வெளிப்படுகின்றது. அதாவது எல்லா அலுவல்களும் நம்மால இலகுவாக நகர்த்தகூடியதல்ல. இதில் தந்திரமாக நகர்த்தக்கூடியளவு மூளை செயற்படும் போது எதுவுமே இலகுவாக்கப்படுகின்றன. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
எரிச்சலை வெளிப்படுத்துவதை போல் வெறொன்றுமில்லை.
அதாவது எரிச்சலை எரிச்சலாக வெளிப்படுத்துவதால் நமக்குள்
எரிச்சல் கொழுந்துவிட்டுக்கொண்டே இருப்பது நம்மை அறியாமலே ஏற்படுவதால் வாழ்க்கையில் ஒவ்வொன்றையும்
தொலைக்கின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha


ஒன்றை கற்கும்போது பலவிஷயங்கள் நமக்கு கற்றுக்கொடுக்கின்றது. அதிலும் நாம் வெளிப்படுத்துவதில் தான்
இதை வெளிப்படுத்தமுடியும்.சாதாரணமாக கூறிவிடுவதில் நாம்
கற்றுவிடமுடியாது. கற்றுக்கொள்ளும் போது பலவிஷயங்கள்
நம்மையும் மீறி வெளிப்படுகின்றன.
by.sujatha.
பொறாமை நமக்குள் ஏற்படுவது என்பது தவறு. அதாவது ஒன்றை
பார்த்து பொறுக்கமுடியாமல் நாமாக ஏற்படுத்துவதால் அதை நாமே வளர்த்துகொண்டிருக்கின்றோம். இதில் குறையை வளர்க்காது அதிலிருந்து விடுபடுவதற்கு கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


கோபதாபங்கள் வாழ்க்கையில் ஏற்படுவது சகஐம். அதற்காக இதை
பெரிதாக வளர்த்துக்கொண்டிருப்பது அதைவிட தவறு.அதாவது
மனதளவில் நாம் பெரிதாக எடுக்கும்வரையில் வளர்ப்பது
நாமாக இல்லாது வாழ்க்கைக்கு வழிகாட்டுவோமாயின் அவை
எமக்கு கற்றுக்கொடுக்கின்றது.
by.sujatha.

Thursday, December 27, 2012

கனவுலக வாழ்க்கை என்பது நிறைவேறாத ஒன்றிற்காக எமக்குள்
ஏற்படுகின்ற ஒருவித ஆசைகள். மறுப்பதற்கில்லை.அதிலும்
கனவோடு நகர்த்திக்கொண்டிருக்கும் போது வாழ்க்கை வாழ்கின்றோம் என்ற உணர்வு இல்லாமல் போகின்றது.இது
வாழ்க்கையை தோற்கடிக்கின்றது. பிரம்மையுணர்வில் விட்டு நகர்வதற்கு கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




துருவித்துருவி விஷயத்தை அறியமுற்படுவதைப்போல் வேறொன்றுமில்லை. அதாவது விஷயத்தை அறிந்துவிட வேண்டும் என்ற அவாவில் கதைவிட்டு கதை கேட்பதால் நாமே
நமது மதிப்போ இழ்க்கின்றோம்.நற்பழக்கமல்ல. கற்றுக்கொள்வோம்.
by.sujatha
அற்பஆசைகளால் ஆசைகளை இன்னும் வளர்க்கின்றோம். அதாவது சிறிதாக வளர்வது பெரிதாக வளர்த்தெடுப்பதுபோல்
வாழ்க்கையை கூட மாற்றிவிடுகின்றது.அதிலும் நிறைவுகளை காணாத ஆசைகளால் வாழ்க்கையும் நிறைவுகாண்பதில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha




அற்பவிடயங்களால் ஏற்படும் மனஸ்தாபங்கள் நாளடைவில்
மனஸ்தாபத்தை வளர்க்கின்றது. இல்லையா. இங்கு அற்பமானது
என்பதை கவனத்தில் எடுக்காமல் மனதிற்குள் போட்டு அலட்டிக்கொண்டிருப்பதால் இந்நிலை நமக்குள் நாமே வளர்த்துக்கொள்வதால் ஏற்படுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கொடுப்பதை அளந்து கொடுப்பது வேறுவிடயம். ஆனால் கொடுத்தது போதும் என்று ஏற்பது அதைவிடமேல். அதைவிட்டு
இதில் குறைகுற்றம் காண்பதிலேயே நேரத்தை செலவிடுவதால்
காலத்தின் ஒருபகுதியையும் இழக்கின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

Wednesday, December 26, 2012

    கவிதை 

வசந்தம்!!!!!


வசந்தம் அல்ல வாழ்க்கை வசந்தம் கொண்டது வாழ்க்கை
வசந்தம் வருவதும் போவதும் வாழ்க்கையில் நியதி
வசந்தமாய் பெருகிட எண்ணமாய் எண்ணுவது
வசதியை பொறுத்த வண்ணம்.

வறுமைக்கோட்டில் இது ஒரு கனவு
வராது வந்திடுமோ நாளும் பொழுதும்
குறுகிய எண்ணத்தில் பெருகிடும் எண்ணமாய்
பெருகிப்பெருகி மூழ்கடிப்பு.


மட்டமாய் வரவிற்கு ஏற்ற செலவு
கட்டம் கட்டமாய் இதற்குள் கனவு
பட்டம் பட்டமாய் பறக்கின்ற நினைவுகள்
எட்டமாய் எட்டினும் எட்டாத கனவில்
வறுமையில் வசந்தம் இது ஒரு கனவு.

ஆக்கம்
சுஜாதா

 கவிதை

கற்றபயன்!!!!!!!

 


கற்றதனால் ஆனபயன் கற்றிடக்கற்றிட
கற்றறிந்து பெற்றிடுவோம்
கற்றிடலானது அறிவிற்கு விருந்து
கற்றதில் பெற்றதும் அதிலும் பேரின்பம்.

கற்றறிவு பலநூலறிவு வாசனையில்
பெற்றறிந்து  அதை பகுத்தறிந்து
பகிர்ந்தளிப்பராயின் அதன் பகிர்வு
பலரறிய பகிர்வது அதைவிட மேல்.

நல்லறிவு பயப்பது நன்கறிந்து
நால்வருடன் பகிரிடின் நமக்குமேலும்
நல்லறிவு வழிகாட்டல் பயக்கும்
அதற்குமேலும் கற்றறிவின் தராதரத்தின் உயர்வு.

கற்றபயனின் பொருளுணர்வு அறிவிற்கு
பெருவிருத்தி அதிலும் கற்றிவு
கற்றதை உணர்த்திடின் கற்பதனால்
அதன் பயன் பெருவிருத்தி.

ஆக்கம்
சுஜாதா

Tuesday, December 25, 2012

 கவிதை !!!

சிக்கல்!!!!! சிக்கல்!!!!




சிக்கல் சீரழிவு வாழ்க்கை நடைமுறையில்
சிக்கலாகிடும் சிற்சிலவேளைகளில்
அற்பவிடயம் அலைக்கழிப்பு ஆனாலும்
சிக்கலில் வரும் அற்பவிடயங்கள்.


பற்பல விடயங்கள்  அலசிடலாம்
பலனின்றி பேசிடின் காலமும் நேரமும்
விரைந்திட சிக்கலில் தவிப்பு
பாதியில் ஏமாற்றம்.

அடைந்தே தீர்வதற்கு எடுக்கும் முயற்சியானாலும்
அடைந்தே இருக்கின்றது சிக்கல்
அடைவதால் பெற்றிடுவது சிக்கலின் பாடம்
அதனால் கற்றது பற்பல சிக்கல்கள்.

ஆக்கம்
சுஜாதா

 கவிதை

அறிவு!!!!!அறிவு!!!!



அறிவிற் பெறுவது தராதர உயர்வு
அறிவிலும் பெறுவது தரமான உயர்வு
அறிவின் ஆற்றலில் தகுதியும் உயர்வு.

ஆறறிவு கொண்டவன் மனிதன்
ஆறில் இருந்து அல்ல அறிவு
அரிவரி ஆரம்பக்கல்வி அதிலும்
அறிவிலோ அறிவு வளர்ந்த தரம்
அறிவால் ஆற்றல் அறிந்திடல் அறிவு.

அறிவிலார் அறிவர் அறிவின் அறிவை
அறிந்திடார் அறிவின் தரத்தை
அறிந்து பெற்றதும் பயனென்று
அறிவார் அறிவின் உயர்வை.

ஆக்கம்

சுஜாதா

கவிதை!!!!


அழகோ அழகு.!!!!!!


அங்குமிங்கும் அழகழகாய் ஆடிப்பாடி கூட்டம்கூட்டமாய்
ஆடிமகிழ்கின்றன அழகோ அழகு.
இங்குமங்கும் பாடிப்பாடி குனிந்துநிமிர்ந்து
குலவும்கூட்டம் கூடிமகிழும் அழகோ அழகு.

இங்குமங்கும் ஒடிஒடி கண்டுகழித்ததில்
கொள்ளைகொண்டது மனது.
நின்றுநிமிர்ந்து பார்த்துப்பார்த்து
கண்டுரசித்ததில் அழகோ அழகு.

ஒன்றுதிரண்டு  கூடிக்கழித்ததில்
ஒருமித்து மிதந்த கொள்ளையின்பம்
தேடிக்கொடுத்த அழகோ அழகு.

ஆக்கம்.
சுஜாதா

நடந்துமுடிந்ததை கதைத்துபிரயோசனம் இல்லை என்று கூறுவது
வழக்கமாகும். இல்லையா. ஆனாலும் பிரயோசனம் இல்லை என்பதல்ல கருத்து மீண்டும் இதைப்பற்றிய விமர்சனம் விட்டு விலகாமலே இருப்பதனால் வாழ்க்கையில் பகுதியை இதில் தொலைக்கின்றோம்.கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
புத்திசாலித்தனம் ஒருவருடைய திறமையிலும் வெளிப்படலாம்
இல்லை திறமையை வெளிப்படுத்துவதாலும் கணிப்பிடுகின்றோம்.
இல்லையா. ஆனாலும் புத்திசாலித்தனம் என்பது எல்லாவிடயங்களிலும் கைகொடுக்கும் என்பதும் எதிர்பார்க்கமுடியாது. வாழ்க்கையில் இது நடைமுறை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha

Monday, December 24, 2012

கல்நெஞ்சு படைத்தவர்கள் என்று குறைகூறுகின்றோம். இல்லையா. சிந்திக்கவேண்டியவிடயம். அதாவது மனதில் உள்ளதை
வெளிக்கொணராத உணர்வுநிலையில் தமக்குள்ளேயே பேசிக்கொண்டிருப்பவர்கள்.இவர்கள் கூறவிரும்புவதை கூறமுடியாமலும் தடுமாறுபவர்கள்.குறையாகவும் எடுக்கமுடியாது. இல்லையா. கற்றுக்கொள்வோம்.
by.sujath
வரும் தடைகளையும் மீறி பிரச்சனைகளிற்கு முகம் கொடுக்கும்
போது நமக்குள் மேலும் பிரச்சனைகளை சந்திக்கமுடியும் என்ற
துணிவு கைகொடுக்கின்றது. இல்லையா. அடுத்துவருபவை சாதாரணமாக எடுக்கும் அளவிற்கு மனம் கட்டுப்படுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
அலுவலைப்பெறுவது இலகுவான விடயமல்ல. ஆனால்அலுவலாக அலுவலைப்பெறுவது அதைவிட மேல்.அதாவது அலுவலாக அலுவலைப்பெறுவது போல் அலுவலைபெற்றுவிட்டு நழுவுவது நமக்கே இழிவான செயலாகும்.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
தப்பிற்கு மேல் தப்பு செய்வது நம்மை இழிவுநிலைக்கு ஆளாக்குகின்றது. இல்லையா. அதிலும் தப்பை தொடர்ந்து செய்வதிலேயே கண்ணாய் இருப்பது ஒருபுறம் இருக்க தப்பே செய்யாதவராய் நடிப்பது போல் இருப்பது அதைவிட வேறொன்றுமில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
வாதம்புரிவது வேறுவிடயம். ஆனால் வாதத்தையே புரிந்து வாழ்க்கையை ஒட்டுவதல்ல வாழ்க்கை.வாதப்பிரதிவாதங்கள்
நம்மை தட்டிக்கொடுக்கின்றது. ஆனாலும் வாதம்புரிவதும் வாழ்க்கையாக இருந்துவிடமுடியாது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
சிலசமயங்களில் வாழ்க்கையை தொலைத்துவிட்டோமா என்று
எண்ணத்தோன்றுகின்றது.இல்லையா. இது தொடரும் வாழ்க்கையில் நமக்குள் நாமே வரு வெற்றிடத்தை நிரப்பி சோதனையிடுகின்றோம். ஆனாலும் முடியும் என்று நாமே ஒரு வெளியை தேடி புதியபயணத்தை தொடரும்போது ஒரு சுகம் கிடைக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்போது மனது மகிழ்ச்சியடைகின்றது. இல்லையா. ஆனாலும் முற்றுப்புள்ளியை
விலக்கி முற்றுப்புள்ளியே இல்லாது தொடருவோமாயின் நாம்
எடுத்தமுடிவும் முற்றுப்புள்ளி அல்ல. பிரச்சனைக்கு வழிவகுக்கின்றோம். விட்டுவிலக கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
ஏமாளியாக ஒருவரை பட்டம் கட்டுவது வேறுவிடயம். ஆனால்
வாழ்க்கையை வெறுமையாக்கி போலியாகவே வாழப்பழகியவர்கள் தம்மை ஏமாற்றாது அடுத்தவரை ஏமாளியாக
எடைபோட்டு வாழவிரும்புபவர்கள் வாழ்க்கையில் நிறைவும் கண்டதில்லை.கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
தங்குதடையின்றி ஒரு காரியம் நிறைவேறி விடவேண்டும்
என்பது கனவாக இருக்கலாம்.ஆனாலும் தடைகளை தாண்டுவதற்கு எடுக்கும் முயற்சிகள் முயற்சியாக இருக்கும்போதே அவை கைகொடுக்கும் அதிலும் வெற்றியும் பெறமுடியும். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

Sunday, December 23, 2012

கட்டுக்கடங்காமல் போவது நம்மை மீறிய ஒருவித தன்னியல்பு.
அதாவது யாருடைய கட்டுப்பாட்டிற்குள்ளும்
நம்மை அடக்கமுடியாத உணர்வு ஏற்படுவதால் நாமே நம்மையும்
மீறி கட்டுப்பாட்டையும் இழப்பதால் வாழ்க்கையின் ஒருபகுதியையும் இழக்கின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
துரதிஷ்டவசமாக ஒன்று நடைபெறுவதை விரும்பாத மனம் விதியை நொந்துகொள்கின்றது. ஆனாலும் வாழ்க்கையில் நடப்பவை எதிர்பார்த்து வருவதில்லை.எதிர்பார்ப்பதும் நடப்பதில்லை. ஆனாலும் விதி என்பது நாமாக நடைமுறைக்கு
ஏற்படுத்திய உணர்வு. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கஷ்டத்தின் மேல் கஷ்டம் வரும்போது நாம் நம்மையே உணர்கின்றோம். அதாவது போதுமானளவு இருக்கும் போது எனக்கு என்ன என்ற கேள்வியை எழுப்புகின்றோம். ஆனால் கஷ்டம் என்று வரும்போது பலபாடங்களை கற்கின்றோம். இல்லையா. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
முன்னிற்குபின் முரண்பட்ட கருத்துக்கள் நமக்குள் விவாதங்களை
ஏற்படுத்துகின்றது. ஆதாவது முரண்பாடுகள் முரண்படும் போது
முரண்படுகின்றன. ஆனாலும் முரண்பாடுகளால் குறைகளை
வளர்க்காது போயின் அவை வாழ்க்கைக்கு வழிகாட்டப்படுகின்றது.
இல்லையா. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
தக்கதருணம் பார்த்து பிரச்சனையை வளர்ப்பதுபோல் வேறொன்றுமில்லை. அதாவது தருணம் வரும்போது பார்க்கின்றேன் என்பதை வன்மையாக மனதில் வளர்ப்பதால் இந்நிலை ஏற்படுகின்றது. ஆனால் வாழ்க்கையில் இவை எமக்கு வழிகாட்டப்படுவதில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கட்டாயம் செய்வேன் என்பதோடு விலகிவிடுவதைப்போல் ஒன்றுமில்லை. அதாவது செய்யமுடியும் என்பதை செய்துகாட்டுவது அதைவிட மேல். சாதாரணமாக கூறிவிட்டு செய்யாதுவிடுவதால் நமது குணத்தை காட்டுவது போலாகும். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
தருணம் பார்த்து காரியத்தை நகர்த்துவது வேறுவிடயம்.ஆனால் தருணத்திற்கு தக்கமாதிரி விஷயத்தை பெறுவதற்கு எடுக்கும்
முயற்சியால் அடுத்தவரை ஏமாற்றுவது அதைவிடமேல். இங்கு
தருணத்தை தருணமாக பார்ப்பது நல்லமனதோடு இருக்கப்படுதல் வேண்டும்.கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கட்டாயம் செய்வேன் என்பதோடு விலகிவிடுவதைப்போல் ஒன்றுமில்லை. அதாவது செய்யமுடியும் என்பதை செய்துகாட்டுவது அதைவிட மேல். சாதாரணமாக கூறிவிட்டு செய்யாதுவிடுவதால் நமது குணத்தை காட்டுவது போலாகும். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கெளரவத்தை பார்த்து ஒரு உதவியை பெறாமல் இருப்பதை போல் வேறொன்றுமில்லை. அதாவது நமக்குள் நாமே தகுதி பார்த்து தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் வாழ்க்கையில்
வாழவும் முடியாது. கெளரவம் அல்ல வாழ்க்கை கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
புன்னகையில் மலரும் முகங்களை பார்த்தவுடன் கையெடுத்து
கும்பிடத்தோன்றுகின்றது. இல்லையா. ஆனால் புன்னகையே
உதிர்க்காது முகம்கொடுக்கும் முகங்களால் நாமும் நமது
புன்னகையை தொலைக்கின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
உழைப்பாளிக்கு காலச்சக்கரம் விரைந்து கொண்டிருக்கின்றது.
சோம்பேறிக்கு காலம் ஒடவில்லை என்கிறது. அதனால் உழைப்பாளி விடியும் காலைப்பொழுதிற்காகவே விழித்திடுகின்றான். சோம்பேறிக்கு என்றுமே விடியாத உலகம்.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் நாம் எதிர்பார்க்காதது. அதாவது இன்று இப்படி ஏற்படும் என்பது நாளையும் எதிர்பார்க்கமுடியாது. நாளை இப்படி ஏற்படும் என்று இன்று எதிர்பார்க்கமுடியாது. இதில் வாழ்க்கை நடைமுறையில் நாம்போடும் தப்புக்கணக்கு. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கட்டாயத்தை கட்டாயப்படுத்துவதைப்போல் வேறொன்றுமில்லை.
அதாவது விருப்பப்பட்டு ஒன்றை பெறுவது ஒருவருடைய மனதைபொறுத்தது. இல்லையா. அதற்காக கட்டாயப்படுத்தி விருப்பத்தை ஏற்படுத்துவது அதைவிட ஒன்றுமில்லை. வாழக்கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
நடந்ததை பரபரப்பாக பேசியே ஊர்கூட்டுபவர்களை போல் வேறொன்றுமில்லை. அதாவது இதில் இல்லாத ஒன்றை புலம்பியே பரபரப்பாக்குவது நமக்கே இழிவான ஒன்றாகும்.அதிலும் தேவையில்லாத விடயங்கள் வாழ்க்கையில்
நமக்கு கற்றுக்கொடுப்பவை அல்ல. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
ஆசையில் ஆசைப்படுவது வேறுவிடயம். ஆனால் ஆசையாக
அவாப்படுவது அதைவிட வேறொன்றுமில்லை. அதாவது ஆசைப்பட்டது கிடைத்திட வேண்டும் என்ற மனம் ஆசையை
அடக்கமுடியாது அவதியில் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருப்பது போலாகும். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
துருவித்துருவி விஷயத்தை அறியமுற்படுவதைப்போல் வேறொன்றுமில்லை. அதாவது விஷயத்தை அறிந்துவிட வேண்டும் என்ற அவாவில் கதைவிட்டு கதை கேட்பதால் நாமே
நமது மதிப்போ இழ்க்கின்றோம்.நற்பழக்கமல்ல. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
நடப்புக்காட்டுவது வேறுவிடயம்.அதிலும் நடப்பாய் நடப்புக்காட்டுவது அதைவிட வேறொன்றுமில்லை. அதாவது
நடப்பாய் இருப்பதை பெருமிதம் கொண்டு அடுத்தவரை அவமதிப்பது போலாகும். கற்றுக்கொள்வோம்.
by.sujatha
சாதாரணமாகவே படபடத்து காரியத்தை கெடுப்பதை போல் வேறொன்றுமில்லை. அதாவது உணர்வை கட்டுப்படுத்து முடியாமல் அடுத்தவர்களை அவசரபடுத்துவது போலாகும். அதிலும் காரியம் சிதறுவதற்கு இதுவும் காரணமாகின்றன.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
அல்லும்பகலும் உழைப்பவனுக்கு உழைப்பு சிந்தனையாகவே இருக்கின்றது. ஆனால் உழைத்து பிழைக்காதவனுக்கு உழைப்பு
உழைப்பை கொடுப்பதாக புலம்பிக்கொள்கோன்றான்.உழைத்து
வாழும் வாழ்க்கை வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுக்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.