Wednesday, December 26, 2012

    கவிதை 

வசந்தம்!!!!!


வசந்தம் அல்ல வாழ்க்கை வசந்தம் கொண்டது வாழ்க்கை
வசந்தம் வருவதும் போவதும் வாழ்க்கையில் நியதி
வசந்தமாய் பெருகிட எண்ணமாய் எண்ணுவது
வசதியை பொறுத்த வண்ணம்.

வறுமைக்கோட்டில் இது ஒரு கனவு
வராது வந்திடுமோ நாளும் பொழுதும்
குறுகிய எண்ணத்தில் பெருகிடும் எண்ணமாய்
பெருகிப்பெருகி மூழ்கடிப்பு.


மட்டமாய் வரவிற்கு ஏற்ற செலவு
கட்டம் கட்டமாய் இதற்குள் கனவு
பட்டம் பட்டமாய் பறக்கின்ற நினைவுகள்
எட்டமாய் எட்டினும் எட்டாத கனவில்
வறுமையில் வசந்தம் இது ஒரு கனவு.

ஆக்கம்
சுஜாதா

2 comments:

  1. ''..மட்டமாய் வரவிற்கு ஏற்ற செலவு
    கட்டம் கட்டமாய் இதற்குள் கனவு
    பட்டம் பட்டமாய் பறக்கின்ற நினைவுகள்
    எட்டமாய் எட்டினும் எட்டாத கனவில்...''

    நல்ல வரிகள்!
    இனிய கவிப் பயணம் தொடரட்டும்
    வாழ்த்துடன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள் !!!! ''கவிதாயினி வேதா'' ஆக்கமும் ஊக்கமும்
    ஒரு எழுத்தாற்றலுக்கு வழிகாட்டுகின்றது.

    ReplyDelete