Wednesday, December 26, 2012

 கவிதை

கற்றபயன்!!!!!!!

 


கற்றதனால் ஆனபயன் கற்றிடக்கற்றிட
கற்றறிந்து பெற்றிடுவோம்
கற்றிடலானது அறிவிற்கு விருந்து
கற்றதில் பெற்றதும் அதிலும் பேரின்பம்.

கற்றறிவு பலநூலறிவு வாசனையில்
பெற்றறிந்து  அதை பகுத்தறிந்து
பகிர்ந்தளிப்பராயின் அதன் பகிர்வு
பலரறிய பகிர்வது அதைவிட மேல்.

நல்லறிவு பயப்பது நன்கறிந்து
நால்வருடன் பகிரிடின் நமக்குமேலும்
நல்லறிவு வழிகாட்டல் பயக்கும்
அதற்குமேலும் கற்றறிவின் தராதரத்தின் உயர்வு.

கற்றபயனின் பொருளுணர்வு அறிவிற்கு
பெருவிருத்தி அதிலும் கற்றிவு
கற்றதை உணர்த்திடின் கற்பதனால்
அதன் பயன் பெருவிருத்தி.

ஆக்கம்
சுஜாதா

2 comments:

  1. இல் ''..அறிவிற் பெறுவது தராதர உயர்வு..'' கவிதையும் தரமான உயர்வு அடையட்டும். இனிய நல்வாழ்த்து வேதா. இலங்காதிலகம்

    ReplyDelete
  2. உங்கள் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள்!!!!
    ''கவிதாயினி வேதா'

    ReplyDelete