Wednesday, September 4, 2013

சிந்திக்க தூண்டுபவை.!!!!



வேண்டாவெறுப்பு மனதில் இருக்கும் கஷ்டத்தை வெளிப்படுத்தாத
உணர்வு. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


ஆடம்பரத்தில் குதூகலித்தாலும் எதிர்நோக்கும் கஷ்டங்கள்
விலகப்போவதில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
வலுக்கட்டாயம் மனதில் மேலும் சுமைகளை ஏற்றிவிடுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



வலோக்காரமாக காரியத்தை சாதிப்பது விமர்சனத்தை வளர்த்தெடுப்பது போலாகும். கற்றுக்கொள்வோம்.
by. sujatha.

சிந்தனைத்துளிகள்!!!!!!!!


குறைகளோடு காலத்தை குறையாக கடத்துவதை போல் வேறொன்றுமில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


குறைகளை காண்பதல்ல பெரிது விரிவுபடுத்துவது அதைவிட மேல். கற்ற்க்கொள்வோம்.
by.sujatha.

Saturday, March 9, 2013

தகுதிதராதரம் நமக்குள் அறிவை வளர்க்கலாம் அதற்காக அடுத்தவரை அவமதிப்பதல்ல வாழ்க்கை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



சளைக்காது உழைப்பவனிற்கு நேரம் பொன்னானது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



குதர்க்கமாக பேசிவிட்டு சங்கடப்படுவதைப்போல் வேறொன்றுமில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha
 
உருட்டும்புரட்டும் வார்த்தைகளை கூட புரளவைக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



பரந்துபட்ட மனதில் வாய்மை தானாகே பேசிக்கொள்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



 மனம் கனப்பாக இருப்பதாக நாமாக மனதிற்குள் அலட்டி குறைப்படுகின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கனவிற்குள் ஆசைகளை வளர்த்து நம்மையை ஏமாற்றிக்கொண்டிருப்பதல்ல வாழ்க்கை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



 மழுப்பி ஒரு அலுவலை முடிப்பது பலதொல்லைகளை வளர்த்துவிடுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha



மரியாதைக்குரியவர்களிடம் பயபக்தி தானாகவே ஏற்படுகின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

சிந்திக்கத்தூண்டுபவை!!!!!


பாடுபட்டு உழைக்கும்போது மனம் பூரிப்பு அடைகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


 பெரிய நினைப்புக்கள் இருக்கலாம் இதுவே நினைப்பாக மாறிவிடலாகாது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


 பட்டகஷ்டங்கள் சிலசமயங்களில் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

Wednesday, March 6, 2013

சர்வதேச பெண்கள் தினம் ஒரு பார்வை.....  8.03.2013.

http://www.bing.com/images/search?q=frauentag+bilder+des+tage&qpvt=frauentag+bilder+des+tage&FORM=IGRE#

சர்வதேச பெண்கள் தினம் ஒரு பார்வை.....  8.03.2013.


ரஷ்ய நாட்டில் இத்தினம் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.அதிலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திஆரத்தழுவி கொள்வதில் பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர். ஆண்கள் மலர்கள் பரிசளிப்பதைவிட பொருளாக  வழங்குவதை அதிகம் விரும்புகின்றனர்.அதைவிடஇவர்கள் பாரிஸ் இல் பிரசித்தி பெற்ற வாசனை திரவியங்களோ இல்லை பெறுமதியான பொருட்களை பரிசாக அளிப்பதை விரும்புவதில்லை. அதனால் பிரச்சனைகள் ஏற்படும் என்பது இவர்களது நம்பிக்கை. அதைவிட விருந்தினர்களை அழைத்து அழைத்து கூடி மகிழ்வது அதிக மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


                                             அதிலும் ஒற்றைப்பட மலர்களை பரிசாக அளிப்பது அதிஷ்டம் எனவும், இரட்டை எண்ணில் கல்லறைகளிற்கே வைப்பது இவர்களது வழக்கமாகும்.

                                                                 யேர்மனியில் 98% குடிமக்கள் பெண்கள்தினத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை சம அடிப்படையில் வருமானம் ஆண் பெண் பாலரிற்கு வழங்கப்படுதல் வேண்டும் என்பதாகும்.அதிலும் கல்விமான்களாக பட்டம் பெற்றும் வருமானம் குறைவாகவே பெறுகின்றனர் எனவும், அடுத்து பெண்களாய் வறுமைப்பட்டவர்கள் உயர்வும் கவனத்தில் எடுக்கப்படுதல் வேண்டும் என்பது வைக்கப்பட்ட கோரிக்கையாகும்.

 முன்னாள் கிழக்கு யேர்மனியில் கடந்த 60 ஆண்டுகளிற்கு முன்பு பெண்கள் கல்வித்தராதரம் முடிக்கப்படாதவர்கள் எனவும், இவர்களது குடும்பத்தில் ஆண்கள்
போரில் இறந்த காரணம் ஒருபுறம் இருக்க பாலர் கல்விநிலயங்களில் சிறுவர்களிற்கு அனுமதி கிடைக்காத பட்சத்திலும் தொடர்ந்து கல்வித்தராதரம் இன்றியே குடும்பப் பெண்களாக வாழ்ந்துள்ளனர்.
                                                        அதிலும் குடும்பத்தில் இளையோர்களாய் பெண்கள் உதவிபுரிந்து வந்துள்ள நிலையில்
சர்வகாலசாலை உயர்கல்வியோ, இல்லை கல்வித்தராதரத்தையே
முடிக்கப்படாமலே இருந்துள்ளனர். இதில் 43.0%  பட்டப்படிப்பை முடிக்கப்படாது பணிபுரியப்படாதவர்களும். 16.0% சர்வகாலசாலை பட்டப்படிப்பை முடிக்காதவர்களும், 24.8% உயர்கல்வி முடிக்கப்படாத பெண்கள் கடந்து 1950 ம் ஆண்டுக்காலப்பகுதியில் இருந்த கணிப்பீடாகும்.  கடந்த 1963ம் ஆண்டில் 30% மே படித்த பெண்களாகவும் பணிபுரியப்பட்டுள்ளனர் எனவும் இதில் தெரிவிக்கப்படுகின்றது.

 

யேர்மன் மொழி பிரதியாக்கம் தமிழில்

சுஜாதா.


Wednesday, February 27, 2013


  தகவலை பெற்றுக்கொள்ளுங்கள்.


உலகில் அதிகூடிய வயதை எட்டிய யப்பானிய பெண்மணி.





படத்தில் இருக்கும் யப்பானிய பெண்மணிக்கு 114 வயது. கடந்த
5.03.1898 ம் அண்டு ஒக்காவில் பிறந்தவரின் அத்தாட்சி பிறப்புப்பத்திரம் காட்டுகின்றது.வயோதிப இல்லத்தில் வசித்துவருபவர் வரும் நாளில் பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். உலகில் அதிகூடிய வயதை எட்டியவராக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார். அத்துடன் யப்பானில் 51000 வயோதிபர்களிற்கு மேற்பட்டவர்கள் 100 வயதை எட்டியுள்ளனர். அத்துடன் யப்பானிலேயே அதிகூடிய வயதையுடைய ஆண் Jiroemon Kimura என அழைக்கபடுபவரிற்கும் 115 வயதாகும். தகவல் கூறுகின்றது.
 யேர்மன் மொழி தமிழில் பிரதியாக்கம்.
சுஜாதா.
 
 ஒரு மனிதனின் உடல் ஆரோக்யம் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கின்றது. ஆசைகளை வெறுக்கும் மனிதன் நீண்ட ஆயுளையும் பெறுகின்றான். முன்னோர்கள் உணவுக்கட்டுப்பாட்டை
இயற்கைவளங்களில் இருந்து பெற்றே ஆரோக்யத்தையும் வளர்த்துக்கொண்டார்கள்.மனிதன் நலத்தை பேணுவதற்கு தன்னை
தயார்படுத்துவதில் கவனத்தை செலுத்துபவனாக இருந்தால் ஆரோக்ய வாழ்வு நம்மை தன்வழி கூட்டிச்செல்கின்றது.
                                                                   உடல் ஆரோக்யம் மனக்கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகின்றது.
அதாவது ஒன்றை வழிநடத்துவது நமக்குள் இருந்து வெளிப்படுதல்
வேண்டும். அடுத்தவரை எதிர்பார்ப்பதில் நமக்குள் இருப்பவை வெளிப்படமாட்டாது.
                                                 இங்கு உணவு பழக்கவழக்கங்கள் முன்னோர்கள் கற்றுக்கொடுத்தவை. ஆனால் இன்று யாவுமே தலைகீழாகிவிட்டன. நாகரீகம் ஒன்று வளர்ந்ததில் உண்ணும் உணவுகள் யாவும் இயந்திரமுறைகளாகிவிட்டன. இதில் ஆரோக்யம் நீண்டதொரு ஆயுளையும் கொடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளன.
       
        

Tuesday, February 12, 2013

கவிதை.

                                 காதல்!!!!!! காதல்!!!! காதல்!!!!

http://www.bing.com/search?q=valentins%20blumen%20bilder&PQ=valentins%20b&SP=1&QS=HS&SK=&sc=7-23&form=WLETSH&pc=WLEM




திறவுகோல்கள் தளர்ந்த மனக்கதவு
திறக்காது தட்டிச்சென்ற இதயக்கதவு
திருடிச்சென்ற வாசல்கதவு தட்டியகதவு
காதல்!!! காதல்!!!!

புனிதமான பாசத்தின் நேசக்கரம் நீட்டியகதவு
புரிந்துணர்வு பகிர்ந்த பாசக்கதவு
புரிவை புரிந்ததில் திறந்தகதவு
புதிதாய் பிறந்த குழந்தை உணர்வு
காதல்!!!! காதல்!!!!


பரவசம் வீசும் தென்றல் காற்றின் சுகமும்
பரந்த பூமி நமக்காக பிறந்த சுகமும்
பரவசமான மூச்சுக்காற்றின் சுகமும்
பரந்து சுகமான பாசத்தின் சுகமும்
பரந்த காதல் !!! காதல்!!!!


புலரும் காலைப்பொழுதின் சுகமும்
மலரும் மலர்களின் வாசத்தின் சுகமும்
மலர்ந்து மலர்கின்ற புன்சிரிப்பின் சுகமும்
மனதை கொள்ளையடித்து கொடுக்கும் சுகமும்
வருடி அழைக்கின்றது சுகமான சுகமாக
காதல்!!! காதல்!!!

 ஆக்கம்  
 சுஜாதா.

Sunday, February 10, 2013

தகவலை பெற்றுக்கொள்ளுங்கள்.

 

உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய விமானநிலயம் சீனா
பெய்ஜிங்கில் கட்டியெழுப்பப்படவுள்ளது.





உலகிலேயே இரண்டாவது பெரிய விமானநிலயத்தை சீனாவின்
தலைநகரம் பீக்கிங் இங்கு அமைப்பதற்குரிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதை அடுத்து 20 கிராமப்புறங்களில் உள்ள
நிலப்பகுதிகள் அபகரிக்கப்படவுள்ளது.50கி.மீ பீக்கிங்கிலிருந்து விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் சோளம், மரக்கறிகள் பயிரிடப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

                                                         வரும் ஐந்து வருடங்களிற்குள் கட்டியெழுபப்படவுள்ளன. இதற்குரிய பெரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், எவரும் எதிர்ப்புக்கள்
தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது
                                          வருடத்தில் 70மில்லியன் சுற்றுலாப்பயணிகள் ஏறி இறங்கும் அளவிற்கு ஏழு ஒடுபாதைகள்  கட்டியெழுப்பப்படவுள்ளன. Nangezhuang  பகுதியில் இருபது கிராமங்கள் உள்ளதாகவும், இவைகளை அப்புறப்படுத்துவதற்கு தயாரகவுள்ளதாக இதற்கு பொறுப்பான    60 வயதுடைய Li Wenhui.  தெரிவித்துள்ளார். வரும் ஆனி மாதம்
ஆரம்பிக்கப்படவுள்ளநிலையில் அரசாங்கத்தின் முடிவையும் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரவிக்கப்படுகின்றது.
                 கடந்த 2008ம் ஆண்டு இப்பகுதியில் புதிய குடிமனைகள்  கட்டியெழுப்புவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தன 
எனவும், அரசாங்கம் இதுவரை அறியத்தரவில்லை எனவும்,  இதனால் வீட்டை கட்டியெழுப்பவோ இல்லை இடத்தை விட்டுவிலகவோ தெரியாது இங்கு வாழ்கின்றோம் என குடிமகன் ஒருவர் முறைப்பட்டுள்ளார்.

                           எட்டு பில்லியாடன் செலவீட்டில் வரும் 2018ம்    ஆண்டு      கட்டியெழுபப்படவுள்ளதாகவும்    இதில் கூறப்படுகின்றது. 

யேர்மன் மொழி தமிழில் பிரதியாக்கம்.
சுஜாதா.


Saturday, February 9, 2013

தகவலை பெற்றுக்கொள்ளுங்கள்.



ஐரோப்பிய எல்லையை கடக்கும் போது அகதிகளாக மரணிப்போர் தொகை.



ஐரோப்பிய நாடுகளிற்கு அகதிகளாக குடியேறுபவர்கள் எல்லைப்பகுதியில் மரணிப்பது கடந்த 2012 ம் ஆண்டில் உயரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 180பேர் மரணித்துள்ளனர். யேர்மன் அரசாங்கம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
                                        அதிகமாக சிரியன், ஈராக், பலஸ்தீன நாட்டவர்களாக கப்பலில் புறப்பட்டு மத்தியகடல் Ägäis, கிறீஸ் கடற்பகுதி லெஸ்பொஸ் பகுதியில் 60ற்கு மேற்பட்டவர்கள் கடந்து 6.12.012 இலிருந்து 21.1.2.2012 வரை மரணித்துள்ளனர்.
                                      யேர்மன் அரசாங்கத்தில் இடதுசாரி கட்சி லிங்ஸ் எழுப்பிய கேள்வியில் இவை வெளியிடப்பட்டுள்ளது.ஐரோப்பிய எல்லைப்பாதுகாப்பு Frontex  தெரிவிக்கையில் இது மேலும் கணிப்பிடப்படுகின்றது.கடந்த 2011ம்
ஆண்டு 33.000 அகதிகள் Frontex  பாதுகாப்பு படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர் எனவும், வருடத்தில் 1000 அகதிகள் ஐரோப்பாவிற்குள் நுளைவதற்காக கப்பலில் வரும்போது மரணிப்பதாக ஐரோப்பிய உள்நாட்டு நிபுணத்துவர் 'ஊளா யெல்ப்க'
தெரிவித்துள்ளார்.

யேர்மன் மொழியில் தமிழில் பிரதியாக்கம்.
சுஜாதா.

Friday, February 8, 2013

தகவலை பெற்றுக்கொள்ளுங்கள்.


வரும் வெப்ரவரி 15ம்திகதி 28.000கி.மீ தொலைவில் புதிய உடுக் கோள் "2012 DA14".
ஒன்று நெருங்கி வருகின்றது. கிழகுஐரோப்பார, அவுஸ்திரேலியா ஆசியா, பகுதிகளில் உருப்பெருக்கியூடாக காணமுடியும். தகவல்
கூறுகின்றது.
தையிட்டு அச்சப்படவேண்டிய அவசியம் இல்லை என நாசாவின் அதிபர் Don Yeomans தெரிவித்துள்ளார்.கடந்த 1908 ம் ஆண்டு 50மீ பெரிய கோள் சிபிரியனில் உடைந்து சிதறியுள்ளதாகவும், இது 1000மடங்கு கிரோஷிமாவில் வெடித்த அணுஆலையையும் விட பெரிது எனவும், இதனால் சிபிரியாவில் 80மில்லியன் மரங்கள் தடிகளாக சிதறியுள்ளன. தகவல்கள் கூறுகின்றது.
 
அடுத்த உடுக்கோள் 2036ம் ஆண்டு பூமியை நெருங்கி வருகின்றது
.ஹாலிவுட் படம் ஆர்மெடோன்", போன்ற ஒரு கனவு காட்சியை
போன்ற முன்மாதிரி அல்ல. என்பது இத்தகவலில் கூறப்படுகின்றது.
 
 66மில்லியன் ஆண்டுகளிற்கு முன்பு வானுலகை மோசமாக கோள்கள் பூமியை தாக்கியுள்ளது. 10கி.மீ தூரமளவில் மெக்ஸிக்கோ நாட்டின் யுகடன் தீபகற்பத்தில் பலகோடி மக்கள்
அழிந்துள்ளனர் எனவும்,பிரபஞ்சத்தில் அடுத்த உடுக்கொள் "Apophis" 2036ம் ஆண்டில் 31,000கி.மீ இல் 250மீ. நீளத்தில் தென்படவுள்ளது. தகவல் கூறுகின்றது.
 யேர்மன் மொழியில் தமிழாக்கம் by.sujatha

Monday, February 4, 2013

கொடுத்து வாங்குவது புரிந்துணர்வில் இருக்கப்படுதல் வேண்டும். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



அனாவசியமான செலவுகளால் கட்டுப்பாடுகளும் இழந்துவிடுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
வெட்டிப்பொழுது கடிகாரத்தை நிறுத்திப்பார்க்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



நளினம் நமக்கே நளினமாக விடலாகாது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
நினைவாற்றல் அதீதசக்தி வாய்ந்த்து. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



விட்டுக்கொடுப்பது மனதளவில் பெரிதாக இருக்கப்படுதல் வேண்டும். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


ஞாபகங்கள் நினைவாற்றலை பட்டியல் இடுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
 
விட்டுக்கொடுக்கும்போது ஒற்றுமை பலம்பெறுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



பலவீனம் உறுதியை எடைபோடுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



ஞாபகங்கள் நினைவாற்றலை பட்டியல் இடுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
 
மதிப்பை மதிப்பால் பெறுவதைப்போல் வேறொன்றுமில்லை.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



அன்பு வார்த்தைகள் எம்மை அழகுபடுத்துகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



ஆறுதல்படுவது கூட ஒருவித மனஅமைதி. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
 
பெருமதிப்பு நமக்குள் இருக்கும் மதிப்பையும் இழக்கவைக்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




மதிப்பை மதிப்பால் பெறுவதைப்போல் வேறொன்றுமில்லை.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



அறிவை பெருக்கும்போது பெருமை தட்டிக்கொடுக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
 

Friday, January 18, 2013

கவிதை.

 

தலைக்கனம்!!!!!! தலைக்கனம்!!!!!!



தகுதி தராதரம் பகுத்தறியாத கனம்
தகுதிக்கு தகுதி தரம்பிரிக்காத கனம்
பகுதி பகுதியாக பிரிக்காத கனம்
தகுதி தரத்திலும் தகாத கனம்.

மனதில் வகுத்திடும் தகுதியல்ல
மனதால் மதிப்பிடும் தகுதியும் அல்ல
கனமாய் கனக்கும் கனமும் அல்ல
கனத்தின் தரமும் பெறுமதியும் அல்ல.

மதிப்போரை மதிக்காத மனோபலம்
மனதில் கனக்க கணக்கிடும்பலம்
மனதால் மதிக்காத அவமதிக்கும் பலம்
தலைக்கனமான பலமல்ல.

ஆக்கம்.
சுஜாதா.


Thursday, January 17, 2013

 கவிதை.

 எண்ணங்கள்!!!!!! எண்ணங்கள்!!!!


 




எண்ணத்தில் எண்ணங்கள் வளர்த்திடலாகுமோ
எண்ணத்தில் எண்ணம் பெருகிடலாகுமோ
எண்ணத்தில் எண்ணமாய் எண்ணிடலாகுமோ
எண்ணத்தில் எண்ணம் உயர்ந்திடலாகுமோ.

எண்ணத்தில் ஏற்றம் பெருமையுமல்ல
எண்ணமாய் ஏற்றம் பெரிதுமல்ல
எண்ணத்தில் ஏற்றம் ஏற்றமும் அல்ல
எண்ணத்தில் ஏற்றம் ஆனித்தரமானதும் அல்ல.

எண்ணக்கருவில் எழுந்திடும்போது அழகழகானவை
கண்ணில் மின்னி கலைந்திடும் போது  கனவானவை
விண்ணில் உயரஉயரப்பறந்தாலும் எட்டமுடியதவை
எண்ணத்தில் எண்ணமாக  இவை நினைக்கமுடியாதவை.


பெருமையிலும் பெருமை எண்ணத்தினாலாகாது
பெரிதான எண்ணத்தில் பெயர் பெற்றிடலாகாது
பெருமாற்றம் எண்ணத்தில் பேரெண்ணமாகிடலாகாது
பெருமிதமான எண்ணம் கொண்டிராத எண்ணம்
பெருமையிலும் பெருமை அன்றோ.

ஆக்கம்.
சுஜாதா.

Tuesday, January 15, 2013

ஏற்படும் குறைகளை வெளிப்படுத்துவோமாயின் அதைவிட வேறொன்றுமில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



மனதில் ஏற்படுவது பயமல்ல. உணர்வுகள் தளர்வதால் கட்டுப்பாட்டை இழக்கின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
நம்பிக்கை தளரும்போது வாழ்க்கை விரட்டுவதாக நாமே
கற்பனை பண்ணுகின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் பரவாயில்லை என்று எடுத்துக்கொள்ளமுடியாது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கற்பனையில் வளரும் ஆசைகள் நிரந்தரமல்ல. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




கற்பனைக்கு எட்டிய வாழ்க்கை நமக்குள் ஏற்படும் ஆசைகளின் ஒருபாதி. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
ஆடம்பரங்கள் நமது கண்ணையே மறைத்துவிடுகின்றது.கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



 அவசரபுத்தி ஒரு நொடிக்குள் நமது வாழ்க்கையை கூட மாற்றிவிடும். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


Saturday, January 12, 2013

தராதரத்தை நாமே எடை போட்டுப்பார்க்கலாகாது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



தகுதி பார்த்து யாரையும் மட்டமாக்கலாகாது, கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கீழ்த்தரமான செயல்கள் நம்மையே கீழ்த்தரமாக்கிவிடுகின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



தலைக்கனம் நம்மையே தலைகுனியவைக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha
தவறாகப்புரிந்து தவறாக நடப்பது அதைவிடமேல். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




அறியாமல் அறிவது வேறுவிடயம். அறிந்தும் அறியாததுபோல்
இருப்பது அதைவிடமேல். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

 தகவல்களை அறிவோம்.



டோக்கியோவில் தயாரிக்கப்பட்ட புதிய வாகனம் ''Toyota 86 sportscar'' தகவல் கூறுகின்றது.



 இனிவரும் காலங்களில் விளையாட்டு கார்கள் எல்லாம் குப்பையில். அந்தளவிற்கு முன்னேறிவிட்டது உலகம். பார்க்கும்போது விளையாட்டு கார் போல் உள்ளது. அதிலும் விற்பனையும் அமோகமாக இருக்கலாம்.

Friday, January 11, 2013

''ஏளனப்பார்வை'' நம்மையே பார்த்து சிரிக்ககூடியது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




 ஏமாற்றுக்காரனின் முகத்திரை கிழிக்கப்படுகின்றது. ஏமாறியவனின் முகம் பிரகாசிக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
மனம் கனக்கின்றதாக நாம் கணக்கிடமுடியாது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




 வாழ்க்கை எளிமையாகும்போது சிக்கனம் கற்றுக்கொடுக்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
வெறுமை நமக்குள் ஏற்படுவதாக ஒருவித உணர்வில் வெளிப்படுத்துகின்றோம். ஆனல் வெறுமை என்று ஒன்றில்லை.கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




பார்வைகளை அளந்தும் அளவிடமுடியாது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

Wednesday, January 9, 2013

உறுதியான நம்பிக்கை மனத்தளர்வை விட்டுவிலக்குகின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


தாமதங்கள் நேரத்தை குறியிட்டுக்காட்டுகின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
சிந்தனைகள் சிலசமயங்களில் சுயநிலையை தொலைத்துவிடுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



புத்திசாலித்தனம் சிலசமயங்களில் எம்மையே மடமையாக்கிவிடுகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
மடத்தனமான பேச்சுக்கள் நம்மையே தலைகுனிய வைக்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



மதிப்பில்லாத உபசரிப்பையும் விட அவமதிப்பது அதைவிடமேல்.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha

Tuesday, January 8, 2013

 கவிதை!!!!

 பெருமை.....பெருமை....



பெருமிதம் கொள்ளாத பெருமை
பெருமிதத்திலும் பெருமை.
பெருமதிமாய் மார்தட்டி மனதினில்  கொண்டதோர் கர்வம்
அவமதிப்பிலும் அவமதிப்பு.

அகத்தில் இல்லாத அழகை தொலைத்து
முகத்தில் உதிக்காத புன்னகையிலும்
சுகத்திலும்  சுகம் கொண்டிராத
பெருமையின் பெருமை கண்டிடலாகுமோ.

மதிப்போர் மதித்திட மகிழ்ச்சியில் பொங்கிட
மனதிலே மலரும் மலர்களைப்போல்
மகிழ்ச்சியை கொடுக்கும் பெருமையின் பெருமிதம்
பெருமையிலும் பெருமை.


தகுதி தராதரம் இதில் காண்பதில் பெருமையல்ல
தகுதிக்கு தகுதி பார்த்திடுவதும் பெருமையல்ல
தலைக்கனம் கனத்திடலாம் மதிப்பவர் மதித்திடாத
பெருமையின் பெருமை அவமதிப்பாகும்.

ஆக்கம்.
சுஜாதா.
தாமதங்கள் நேரத்தை குறியிட்டுக்காட்டுகின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



உதாசீனப்படுத்துவது எமக்கே அவமரியாதையை ஏற்படுத்துகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
மனஸ்தாபங்கள் மனதளவில் இருப்பதால் தீர்ந்துவிடப்போவதில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha



மனக்கசப்பு மனதளவில் இருக்கப்படுவதைவிட வெளிப்படுத்துவது
அதைவிடமேல். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
ஆடம்பரங்கள் ஆசையில் மூழ்கவைக்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


உறுதியான நம்பிக்கை மனத்தளர்வை விட்டுவிலக்குகின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

Monday, January 7, 2013

அறிவே இல்லை என்பது எம்மை மேலும் அறிவை வளர்ப்பதற்கு
கூறும் அறிவுரையாகும். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



சகிப்புத்தன்மை பொறுமையை எடைபோடுகின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
உதாசீனப்படுத்துவது எமக்கே அவமரியாதையை ஏற்படுத்துகின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


வேண்டாவெறுப்பாக ஒன்றை ஏற்பதைவிட ஏற்காமலே விடுவது
அதைவிடமேல். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
அறிவே இல்லை என்பது எம்மை மேலும் அறிவை வளர்ப்பதற்கு
கூறும் அறிவுரையாகும். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



விளங்காத விடயங்களிற்கு விதாண்டாவாதம் அதைவிடமேல்.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

Saturday, January 5, 2013

தகுதி பார்த்து பெருமைப்படுவதால் இருக்கின்ற தகுதியையும்
இழக்கின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



அன்பிற்கு அடிமையாகும் போது வார்த்தைகள் கட்டுப்படுகின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
கட்டுப்பாட்டிற்குள் அடங்குவதென்பதை விட கட்டுப்பட்டு அடங்குவது அதைவிடமேல். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.




கட்டுப்படுவோம் என்பது கூறிவிட்டால் மட்டும் போதாது.
செயலில் வெளிப்படுத்துதல் அதைவிடமேல். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
ஏமாற்றங்கள் தோல்விகளை பரீட்சிக்கின்றது.
தோற்கடிக்கப்பட்ட ஏமாற்றங்கள் கற்றுக்கொடுக்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



அறிவுரைகள் எடுத்துக்கூறுவதைவிட அறிவுரைகளை வழிப்படுத்துவது அதைவிடமேல். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
மனதில் உறுதி நம்மையே பரீட்சிக்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



மனவலிமை சுமைகளின் பாரத்தை குறைக்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
அறிவாற்றல் அறிவையே பெருக்குகின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


அறிவால் அறிவை கற்றுக்கொள்ளும்போது அறிவைப்பெறுகின்றோம். கற்றுக்கொள்வோம்.
by.sujatha.

Thursday, January 3, 2013

அளவிற்கு மீறிய கட்டுப்பாடு நமக்குள் இருக்கும் கட்டுப்பாட்டை
இழக்கவைக்கின்றது. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



சுயரூபம் மனதில் வெளிப்பட்டாலும் செயலில் காட்டுவது இழிவான செயல். கற்றுக்கொள்வோம்
by.sujatha.
நிம்மதியை தேடுவதாக நிம்மதியே இழக்கின்றோம்.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.


சகவாசமே வேண்டாம் என்பதால் நிம்மதியை இழக்கின்றோம்.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.
சாட்டுக்களை சாடவைத்து காரியங்களை விலக்குவதைப்போல்
வேறொன்றுமில்லை. கற்றுக்கொள்வோம்.
by.sujatha.



சிலசாட்டுக்கள் எம்மையே சாடவைக்கின்றது.
கற்றுக்கொள்வோம்.
by.sujatha.